logo


கழகத்தின் வேர்கள்பேரறிஞர் அண்ணா

அறிஞர் அண்ணா, திராவிட நிலமும், தமிழ் இனமும் உள்ளவரை வரலாற்றில் மறைக்க முடியாத ஒரு அரசியல் தலைவர். 15 செப்டம்பர் 1909-ல் காஞ்சிபுரத்தில் நடராசன் மற்றும் பங்காரு அவர்களுக்கும் மகனாக ஒரு மாமனிதன் பிறந்த போது, அந்த காஞ்சிபுரத்தில் உள்ளவர்கள் மட்டுமல்ல, திராவிட இனமும், ஒட்டுமொத்த தமிழுலகும் நினைத்துக்கூட பார்த்திருக்க மாட்டார்கள் தங்கள் ஊரிலிருந்து, தங்கள் இனத்திலிருந்து ஒரு பெர்னான்சா உருவாவர் என்று. ஆம் அவர்தான் தென்னாட்டு பெர்னாட்ஷா அறிஞர் அண்ணா.

அரசியல் சிந்தனையற்று பின்தங்கி கிடந்த தமிழ் சமுதாயத்தை அண்ணா அவர்கள் தன் எழுத்துக்களாலும், பேச்சுகளிலும் தட்டி எழுப்பியவர். தமிழ் நாட்டை அண்ணா ஆட்சி செய்தது என்னவோ இரண்டு ஆண்டுகள் என்றாலும் யாரும் செய்ய முடியாத அளப்பரிய சாதனைகளை செய்து காட்டியவர் அவர். "காஞ்சிபுரத்திலிருந்து வந்து மாபெரும் கழகத்தை கட்டியவர், பாமரனாக இருந்து பாராளுமன்றத்தை தன் வசப்படுத்தியவர், குடிசையிலிருந்து வந்து கோபுரம் ஏறியவர்" அன்று அண்ணாவைப் பற்றிய பெருமைகளை அடுக்கி கொண்டே போகலாம். அதனால் தான் சொல்கிறோம் அறிஞர் அண்ணா ஒரு சாதாரண மனிதரல்ல , அவர் ஒரு "அரசியல் வரலாறு."புரட்சித்தலைவர் MGR

1972 ல் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற பெயரில் புதிய கட்சியொன்றை புரட்சித்தலைவரின் தொண்டர் அனகாபுத்தூர் இராமலிங்கம் ஆரம்பித்தார். அந்த கட்சியின் உறுப்பினராக சேர்ந்து அதன் பாெதுச்செயலாளாராகப் பொறுப்பேற்றார் புரட்சித்தலைவர் MGR. 1977, 1980, 1984 ஆகிய மூன்று ஆண்டுகள் நடந்த தேர்தலில் தொடர்ந்து வெற்றி பெற்று தமிழக முதலமைச்சரானார்.

எம்.ஜி.ஆரின் திட்டங்களில் மகத்தான திட்டம் எம்.ஜி.ஆர் சத்துணவுத் திட்டமாகும். மக்கள் மத்தியில் பெரும் செல்வாக்கு பெருகின்ற திட்டமாக இது இருந்தது. மேலும் விதவை ஆதரவற்ற பெண்களுக்கு திருமண உதவி, மகளிருக்கு சேவை நிலையங்கள், பணிபுரியும் பெண்களுக்கு தங்கும் விடுதிகள், தாய் சேய் நல இல்லங்கள், இலவச சீருடை வழங்குதல் திட்டம், இலவச காலணி வழங்குதல் திட்டம் இலவச பற்பொடி வழங்குதல் திட்டம், இலவச பாடநூல் வழங்குதல் திட்டம், மாற்றுத் திறனாளிகளுக்கான உதவி, இலவச ஆம்புலன்ஸ் திட்டம், மாதம் தோறும் உதவித் தொகை கொடுக்கும் திட்டம், நாள்தோறும் மதிய உணவு வழங்கும் திட்டம், ஆண்டிற்கு இருமுறை இலவச உடை வழங்கும் திட்டம், கைவினைஞர்களுக்கான கருவிகள் வழங்கும் திட்டம், படித்து வேலையில்லாத இளைஞர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் திட்டம், வீட்டுக்கொருவருக்கு வேலை கொடுக்கும் திட்டம், இலவச வேட்டி சேலை திட்டம்,குடிசைக்கு ஒரு மின்விளக்கு என பல திட்டங்களை தமிழ்நாட்டிற்கு தந்தவர் புரட்சித்தலைவர் MGR.
புரட்சித்தலைவி அம்மா

தமிழக அரசியலில் மட்டுமல்லாமல் இந்திய அரசியல் வரலாற்றிலும் தனித்துவமான தடங்களை பதித்துச்சென்ற முன்னாள் முதல்வர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் தனது ஆட்சிக் காலத்தில் பல மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்றி சாதித்துள்ளார். பெரும்பாண்மையாக ஆண்களே கோலோச்சுகிற தமிழக அரசியலில் கால் நூற்றாண்டுக்கும் மேலாக வெற்றிக்கொடி நாட்டியவர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள். மார்க்கரெட் தாட்சர், இந்திராகாந்தி, மாயாவதி வரிசையில், இரும்பு பெண்மணியாக புரட்சித்தலைவி அம்மா அவர்கள் தனித்துவமிக்க அரசியல் ஆளுமையாக விளங்கினார்.

தமிழக அரசியலில் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் 16 ஆண்டுகள் முதலமைச்சராக இருந்தார். அவர் முதலமைச்சாராக இருந்த கால கட்டத்தில் பல மக்கள் நலன் சார்ந்த நடவடிக்கைகளை மேற்கொண்டார். அதே போல, இந்தியாவில் மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியான பல மக்கள் நலத் திட்டங்களை கொண்டுவந்தார். தொட்டில் குழந்தை திட்டம், அனைத்து மகளிர் காவல் நிலையம் அறிமுகம், மழைநீர் சேகரிப்புத் திட்டம், கள்ளச் சாராயம் ஒழிப்பு, லாட்டரி சீட்டு தடை, நில அபகரிப்புச் சட்டம், அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இலவச மடிகணினி திட்டம், படித்த ஏழைப் பெண்களுக்கு திருமண உதவியாக ரூ.25,000 உடன் 4 கிராம் தங்கம், கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவாளர்களுக்கு 200-750 யூனிட் இலவச மின்சாரம், அம்மா மருத்துவ பரிசோதனை திட்டம், அம்மா உணவகம், அம்மா குடிநீர் ,முதியோர் இலவச பஸ் பயண திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை தமிழ்நாட்டிற்கு தந்தவர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள்.புரட்சித்தமிழர் எடப்பாடியார்

2017-ம் ஆண்டு பிப்ரவரி 16-ம் தேதி தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றார் புரட்சிதமிழர், பொதுச்செயலாளர் மாண்புமிகு எடப்பாடியார் அவர்கள். இன்றைக்கு அ.இ.அ.தி.மு.க-வுக்கு மட்டுமல்லாமல், தமிழக அரசியல் களத்திலும் தனிப்பெரும் தலைவராக இருப்பவர் பொதுச்செயலாளர் எடப்பாடியார் அவர்கள்.

காவிரி டெல்டா பகுதிகளில் உள்ள விவசாய நிலங்கள் பாதுகாக்கப்பட்ட பகுதிகளாக அறிவிப்பு, குடிமராமத்து திட்டம், கொரோனா வைரஸை கையாண்ட திறமை, கொரோனா வைரஸ் பரவலால உலக நாடுகள் பொருளாதார சரிவுகளை சந்தித்துள்ள நிலையில், தமிழக அரசு 3ஆயிரம் கோடிக்கும் அதிகமான முதலீடுகளை ஈர்த்து தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சியை அதிகரித்தது, அத்திக்கடவு அவினாசி திட்டம், பல புதிய மருத்துவ கல்லூரிகள் உருவாக்கம், பிளாஸ்டிக் பைகளுக்கு தடை, 6 புதிய மாவட்டங்கள் அறிவிப்பு, உழவன் ஆப் (செயலி) மேலும் சென்னையில் கடுமையான தண்ணீர் பிரச்னை இருந்த பொது அந்த நேரத்தில், ரூ.1,000 கோடியை ஒதுக்கி தமிழகம் முழுவதும் குடிமராமத்துப் பணிகளை முழுவீச்சில் மேற்கொள்ள உத்தரவிட்டார். 80 ஆண்டுகளாகத் தூர்வாராமல் இருந்த மேட்டூர் அணை தூர்வாரப்பட்டது. அதனால் கொள்ளளவு அதிகரித்து, இரண்டு தடவை பாசனத்துக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டது. நிறைய தடுப்பணைகளும் பாலங்களும் மேம்பாலங்களும் கட்டப்பட்டன. 95 கூட்டுக்குடிநீர் திட்டங்களும் சாலை மேம்பாட்டுத் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டன. நகர்ப்புற வளர்ச்சித் திட்டங்கள் உள்பட மத்திய அரசின் திட்டங்களைச் சிறப்பாக செயல்படுத்தி, இந்திய அளவில் மத்திய அரசின் விருதை தமிழக அரசு பெற்றது புரட்சிதமிழர் எடப்பாடியார் அவர்களின் ஆட்சியில் தான்.கழகத்திற்கு ஆதரவு தெரிவிக்க